மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

0 476
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (Poisonous liquor) குடித்து பலியானோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

மொரேனா மாவட்டம் பகவாலி, மான்பூர் கிராமங்களில் கடந்த 11ஆம் தேதி இரவு சாராயம் அருந்தியவர்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்நிலையில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரில், மேலும் 8 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மொரேனா மாவட்ட கலால் அதிகாரி, போலீஸ் அதிகாரி உட்பட 4 அரசு அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments