பறவைக் காய்ச்சல் குறித்து அச்சப்படவேண்டியதில்லை - மத்திய அரசு

பறவைக் காய்ச்சல் குறித்து அச்சப்படவேண்டியதில்லை - மத்திய அரசு
பறவைக் காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்படவேண்டியதில்லை எனவும், குளிர் காலங்களில் பறவைகளுக்கு இந்நோய் எற்படுவது இயல்பு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பறவைகள் வருவதால் ஆண்டு தோறும் இந்தியாவில் குளிர்காலங்களில் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதாக மத்திய விலங்கியல் துறை செயலாளர் அதுல் சதுர்வேதி ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பறைவைக் காய்ச்சலானது இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தொடங்கி, பிப்ரவரி - மார்ச் மாதம் வரை ஏற்படும் பொதுவான நிகழ்வு எனக் கூறும் அதுல் சதுர்வேதி, இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இது நிகழ்வதாகவும், மனிதர்களுக்கு இதுவரை பரவவில்லை எனறும் கூறுகிறார்.
Comments