முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் வருகிற 27-ம் தேதி திறப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் நினைவிடம், அருங்காட்சியகம், கண்காட்சி ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதில், முதற்கட்டமாக ஃபீனிக்ஸ் பறவை வடிவத்திலான நினைவிடத்தை மட்டும் வருகிற 27-ம் தேதி திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுழைவு வாயிலில் இருபுறமும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
Comments