உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 4 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என பஞ்சாப் விவசாயிகள் குற்றச்சாட்டு

0 2503
உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 4 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என பஞ்சாப் விவசாயிகள் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் உறுப்பினர்கள் நால்வரும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் எனப் பஞ்சாப் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளையும், அரசின் பார்வையையும் தெரிந்துகொண்டு பரிந்துரைகளை வழங்க நால்வர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

விவசாய சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மான், வேளாண் பொருளியல் வல்லுநர்கள் பிரமோத் குமார் ஜோசி, அசோக் குலாட்டி, ஊடகவியலாளர் அனில் கண்வத் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் நால்வரும் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தும் நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும், அதனால் இந்தக் குழுவைத் தாங்கள் ஏற்கப்போவது இல்லை என்றும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments