ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் போகி விழா கொண்டாட்டம்

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் போகி விழா கொண்டாட்டம்
ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்திப் போகி கொண்டாடியுள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கோவா ஆளுநர் மாளிகையில் குடும்பத்துடன் போகி கொண்டாடினார். தெலங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதா ஐதராபாத்தில் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து போகி விழாவில் பங்கேற்றார்.
ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாச ராவ் விஜயவாடாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடினார். தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பரிதலாவில் பொதுமக்களுடன் சேர்ந்து போகி கொண்டாடினார்.
Comments