ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ள நிலையில் களை கட்டியுள்ள பனிக்கால விளையாட்டுகள்

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ள நிலையில் களை கட்டியுள்ள பனிக்கால விளையாட்டுகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ள நிலையில் பனிக்கால விளையாட்டுகள் களை கட்டியுள்ளன.
ஸ்ரீநகரில் குதிரை சவாரி போன்றவற்றுடன் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சிகள் பனிக்காலத்தில் தொடங்கியுள்ளன.
இங்குள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பனிமலைகளுக்கு இடையே தற்காப்புக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் பெண்கள் உட்பட பலர் ஆர்வததுடன் பங்கேற்றனர்.
பஞ்சுப் பொதிகள் போல் பனிமூடிய பாதைகள், மலைகளின் இடையே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
Comments