கியூபாவை பயங்கரவாத நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு

0 2102
கியூபாவை பயங்கரவாத நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு

கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ வெளியிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்ததை அடுத்து பயங்கரவாத ஆதரவு நாடு பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்பட்டது .

கியூபாவில் கடந்த 1959ஆம் ஆண்டில் நடந்த புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவு முறிந்தது என்பது நினைவு கூரத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments