பொங்கல் விழா உற்சாகம்..!

0 769
பொங்கல் விழா உற்சாகம்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னை:

சென்னை அமைந்தகரையில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.

சென்னை மாதவரத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கூடுதல் ஆணையர் அருண் உள்பட 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி:

திருச்செந்தூர் அருகே சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா ஆசிரியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியிலுள்ள, ஏவிபி நேசனல் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டுப்புற கிராமிய பாடல்களுக்கு மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர்.

கன்னியாகுமரி:

தோவாளையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார்

மயிலாடுதுறை:

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிலம்பம், வேல்கம்பு விளையாட்டு, வாள்வீச்சு, சுருள்வீச்சு விளையாட்டு ஆகியவற்றை செய்து காட்டினர்.

கோவை:

கோவை மாவட்டம் வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீஇராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கயிறு இழுத்தல், அம்மி அரைத்தல், உரி அடித்தல் ஆகியவற்றுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments