"உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம்"- மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி தகவல்

"உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம்"- மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி தகவல்
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசின் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளது என்றும் வேளாண் சட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, வரவேற்பதாகவும், உச்சநீதிமன்ற குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்றும் கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார்.
Comments