தமிழகம் முழுவதும் அனுமன் ஜெயந்தி கோலாகலம்..!

0 1339
தமிழகம் முழுவதும் அனுமன் ஜெயந்தி கோலாகலம்..! பக்தர்கள் சிறப்பு சுவாமி தரிசனம்

மிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திரளான பக்தர்கள் அனுமனை தரிசனம் செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அனுமனை தரிசித்தனர்.

சிவகங்கை:

 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணா நகரில் அமைந்துள்ள ராமர் ஆலயத்தில் உள்ள அஞ்சலி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 திருவாரூர்:

திருவாரூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி:

ஓசூரில் ஆஞ்சநேயர்,அனுமந்தன்,அனுமந்தராய சுவாமி என்னும் பல பெயர்களில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments