கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : 7 பேர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட வாய்ப்பு ?

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 7 பேர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக அமைச்சரவையில் 27 போர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தனது அமைச்சரவையை விரிவுபடுத்த முதலமைச்சர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா பெங்களூரு ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. தற்போது கலால்துறை அமைச்சராக உள்ள நாகேஷ் பதவி நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்த என்.முனிரத்னா, எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், மஜத கூட்டணி ஆட்சி கவிழ உதவிய சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments