மலேஷியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - அவசர நிலை பிரகடனம்

0 1144
மலேஷியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - அவசர நிலை பிரகடனம்

மலேஷியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலேஷியாவில், மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரமாக இருந்தது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 38ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது தவிர, நாட்டின் பல பகுதிகளில் மழை, வெள்ளத்தால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற காரணங்களால், பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று, மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அவசர நிலை பிரகடனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments