மாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..!

0 6016
மாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..!

மாஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்டதையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் ஆடிப்பாடியும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சென்னையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டதையொட்டி, விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாகக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோவையில், விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

நெல்லை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மாஸ்டர் படத்தைக் காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments