மாட்டுச் சாணத்தால் உருவான இந்தியாவின் முதல் பெயின்ட்: அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்

0 2507
மாட்டுச் சாணத்தால் உருவான இந்தியாவின் முதல் பெயின்ட்: அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்

காதி நிறுவனத்தின் புதிய பொருட்கள் குறித்து டெல்லியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார்.

மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட பிரகரிதிக் பெயின்ட் என்ற புதிய வேதிய பெயின்ட்டை அந்த நிகழ்வில் அவர் அறிமுகம் செய்து வைத்தார். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அதே நேரத்தில் கிருமி நாசினியாகவும் இந்த பெயின்ட் விளங்குகிறது.

இது டிஸ்டம்பர், பிளாஸ்டிக் எமல்ஷன் என இருவகைகளில் கிடைக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பிரதமரின் இலட்சிய திட்டத்தின் கீழ் இந்த புதிய பெயின்ட் வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments