ரகசிய திருமணம் செய்துகொண்ட கணவன் ஊரறிய திருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொன்ற மனைவி

0 12899

காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட கணவன், ஊரறிய திருமணம் செய்ய மறுத்ததால் மனைவி அவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

கோதாவரி மாவட்டம் மால்க்கப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாத்தாஜி நாயுடு, கொவ்வூரு கிராமத்தைச் சேர்ந்த பவானியை காதலித்து ரகசிய திருமணம் செய்தார்.

4 மாதங்களாக குடும்பம் நடத்திய நிலையில், ஊரறிய திருமணம் செய்ய தாத்தாஜியிடம் பவானி வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட பவானி, சம்பவத்தன்று தாத்தாஜியுடன் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற போது கத்தியால் கணவனை குத்திக் கொலை செய்தார். பவானியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments