அமெரிக்காவில் 70,000 கணக்குகளை முடக்கியது டுவிட்டர்

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் கணக்குகளை முடக்கி உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிட வன்முறை தொடர்பாக சமூகவலைதளமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. அந்த பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வன்முறை தொடர்பான கருத்துக்களை பதிவிட்டதாக 70 ஆயிரம் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்துக்கள், வீடியோக்களை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments