விவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவலா? - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா? என்பதற்கு மத்திய அரசு, 13 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்ற போது, போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவல் உண்மைதானா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால், போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனரா? என்பது தொடர்பாக மத்திய அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Comments