தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

0 6352

மிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்றார்.

அடுத்த இரு நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

14 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென புவியரசன் குறிப்பிட்டார்.

15,16 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்ற அவர், சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments