நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் சவாலானது- அடர் பூனாவாலா

0 831
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் தங்களுக்கு சவாலானது என்று சீரம் இந்தியா நிறுவன உரிமையாளர் அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் தங்களுக்கு சவாலானது என்று சீரம் இந்தியா நிறுவன உரிமையாளர் அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை கோவிஷில்டு தடுப்பூசிகளை தயாரிக்கப்படும் என்று அவர் கூறினார். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதற்குப் பிறகு சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments