முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சி.டி. ரவியின் கருத்து சரிதான்- எல்.முருகன்

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்த கருத்து சரிதான் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்த கருத்து சரிதான் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்குமென அவரும், சிடி ரவியும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என சி.டி. ரவி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கட்சியின் தேசியக் குழுவின் கருத்தை கேட்டுதான் சி.டி. ரவி அவ்வாறு கூறியிருப்பார் என்று பதிலளித்தார்.
Comments