பெண் கொடுக்க மறுப்பு... காதலித்த பெண்ணின் தந்தை படுகொலை!- ஒரு தலைக்காதலால் விபரீதம்

0 4223

கோவை அருகே சுல்தான் பேட்டையில் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே எஸ்.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலிஸின் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் கயிறு ஆலையில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி செலின் ரோமிலா ஒடக்கல்பாளையம் தொடக்கப்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி  கணவருடன் பெங்களூரில் வசித்து வருகின்றார். இளைய மகள் கன்னியாகுமரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

ஜார்ஜ் ஜான் ஏஞ்சலிஸின் இரண்டாவது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பெண் கேட்டுள்ளார். ஆனால் , கார்த்திக்கிற்கு தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தை ஜார்ஜ் ஜான் ஏஞ்சலிஸின், சமீபத்தில் தனது இரண்டாவது மகளுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த திங்களன்று ஜார்ஜ் ஜான் ஏஞ்சலிஸின் வீட்டில் தனியாக இருந்த போது அவரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலினை குத்தி கொலை செய்தார். பின்னர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்தார். 

தன் நண்பர்களை செல்போனில் அழைத்து ஜார்ஜ் ஜான் ஏஞ்சலினை கொலை செய்ததையும், விஷம் குடித்த  தகவலையும் தெரியபடுத்தியுள்ளார். இதனால், பதறிப்போன அவரின் நண்பர்கள் விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே,  கணவரை பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காத்தால் , அவர் பணிபுரியும் நிறுவனத்தில் செலின் விசாரித்துள்ளார். பின் நிறுவன ஊழியர்கள் வீட்டுக் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலின் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து  சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சுல்தான்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments