வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 14923
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிக கனமழையும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 18 செ.மீ. மழையும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 15 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் நாளை வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments