அதீத பணிச்சுமை, மன அழுத்தம்... அரியலூர் சப் இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு!

0 12609

அரியலூரில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜெகதீசன் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருக்கு ராதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ஜெகதீசன் பதவி உயர்வு பெற்று, அரியலூர் மாவட்டம் தா. பழூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் பணிக்கு செல்லும் ஜெகதீசன் இன்று செல்லவில்லை. அதனால் காவல் நிலையத்திலிருந்து ஜெகதீசன் தொலைபேசி எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டனர்.  ஜெகதீசன் தனது செல்போனை எடுக்கவில்லை. பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஜெகதீசன் குடியிருக்கும் காவலர் குடியிருப்பு வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு ஜெகதீசன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை. 

ஜெகதீசன் தற்கொலை குறித்து அவரது மனைவி ராதா மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த ஏடிஎஸ்பி திருமேனி, டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, இறந்த ஜெகதீசன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிச்சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜெகதீசனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே அவரது உடல் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதால் அங்கு வந்த  உறவினர்கள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பணிச்சுமை காரணமாக ஜெகதீசன் தற்கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments