மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து 11 பேர் பலி

0 704
மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (toxic liquor) குடித்து 11 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயம் (toxic liquor) குடித்து 11 பேர் பலியாகியுள்ளனர்.

மோரெனா மாவட்டம் பகவாலி, மான்பூர் கிராமங்களைச் சேர்ந்த பலர் நேற்றிரவு சாராயம் அருந்தியுள்ளனர். இதையடுத்து உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பகவாலி கிராமத்தை சேர்ந்த 3 பேரும், மான்பூர் கிராமத்தை சேர்ந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.

மேலும் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை பாதித்து  7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் அவர்கள் அருந்திய சாராயமே மரணத்துக்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments