பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கு : முக்கிய குற்றவாளி ஆதித்திய ஆல்வா சென்னையில் கைது

0 862
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கு : முக்கிய குற்றவாளி ஆதித்திய ஆல்வா சென்னையில் கைது

பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த, மறைந்த கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகனும், நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனருமான ஆதித்தியா ஆல்வா சென்னையில் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஆதித்ய ஆல்வாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments