மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 4 பேர் கொள்ளை

0 781
மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 4 பேர் கொள்ளை

மகாராஷ்டிர மாநிலம், தானேயில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 4 பேர் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அம்பர்நாத் (Ambernath) பகுதியிலுள்ள நகைக்கடைக்குள் புகுந்த மாஸ்க் அணிந்த 4 பேர், கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டி 12 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்தனர்.

பின்னர் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் தடுத்ததால் துப்பாக்கியாலும் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments