தசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வீரர் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்

தசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வீரர் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்
தசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பும்ராவிற்கு அடிவயிற்றில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் வருகிற 15-ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே காயம் காரணமாக இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் விலகியுள்ளது குறிப்பிடதக்கது.
Comments