கிராம சபை கூட்டத்தால் என்ன பயன்..? - முதலமைச்சர் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தால் என்ன பயன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தெருவிளக்கு எரியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியதாகவும், அதன் பின்னர் அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்து கொடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் எனவும் மு.க.ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments