போர்ச்சுகல் நாட்டு அதிபருக்கு அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு

போர்ச்சுகல் நாட்டு அதிபருக்கு அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு
போர்ச்சுகல் நாட்டு அதிபர் அறிகுறியற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் அதிபராக Marcelo Rebelo de Sousa இருந்து வருகிறார். 72வயதான இவருக்கு கடந்த 6ந்தேதி நடைபெற்ற சோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்தது.
ஆனால் நேற்று மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு அறிகுறியற்ற கொரோனா பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், குணமடைந்த பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
Comments