எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 14 வயது சிறுவன் படுகாயம்

0 1009
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் - 14 வயது சிறுவன் படுகாயம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த முகம்மது ஜஹாங்கீர் என்ற சிறுவன் படுகாயமடைந்தான்.

நேற்று காலை முதல் மாலை வரை பாகிஸ்தான் 3 முறை தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments