சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி விநியோகம் தொடக்கம்..! விமானங்களில் அனுப்பிவைப்பு

0 1599
சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி விநியோகம் தொடக்கம்..! விமானங்களில் அனுப்பிவைப்பு

புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்க உள்ளது.

இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையினை, 200 ரூபாயாக, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக ஒரு கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளை மத்திய அரசு வாங்கியுள்ளது.

இந்த மருந்து, ஹெச் எல் எல் எனப்படும் ஹிந்துஸ்தான் லைஃப் கேர் லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் இன்று அதிகாலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து புனேயில் உள்ள சீரம் நிறுவன கிட்டங்கியில் இருந்து காலை 5 மணியளவில் குளிர்சாதன வசதி கொண்ட 3 லாரிகளில் இந்த மருந்துகள் ஏற்றப்பட்டன.

இந்த லாரிகளில் 478 பெட்டிகளில் கோவிஷீல்டு மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெட்டியும் 32 கிலோ எடையுடன் கூடியவை. இந்தப் பெட்டிகளுக்கு பூஜை செய்யப்பட்டு விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments