உலகம் முழுவதும் 15 லட்சம் பேருக்கு ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல்

உலகம் முழுவதும் 15 லட்சம் பேருக்கு ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல்
உலகம் முழுவதும் 15 லட்சம் பேருக்கு ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் நேரடி வருவாய் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், ஸ்புட்னிக் வி மருந்தைச் செலுத்தியவர்களில் எத்தனை பேர் ரஷ்யர்கள் என்பதையும், மற்ற நாட்டினர் எத்தனை பேர் என்பதையும் கூற மறுத்து விட்டார்.
ஆனால் தங்கள் மருந்தை வாங்கிய நாடுகளின் பட்டியலை வெளியிடத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கொரோனா தடுப்பு மருந்தை உலகிலேயே முதன் முதலில் தயாரித்து விட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதமே ரஷ்யா அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து 10 கோடிக்கும் அதிகமான ஆர்டர்களை ஸ்புட்னிக் வி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments