பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மட்டும் அரசு சிறப்பு பேருந்துகளில் 89,811 பேர் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி, போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, ஆயிரத்து 985 பேருந்துகளில் எண்பத்து 9 ஆயிரத்து 811 பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தொண்ணூற்று 2 ஆயிரத்து 300 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 13 ஆம் தேதி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு அதிக மக்கள் பயணம் செய்வார்கள் என காத்திருந்த நிலையில், குறைவான அளவில் மட்டுமே மக்கள் முன்பதிவு செய்துள்ளதாக கவலை தெரிவித்தனர்.
Comments