புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாரம்பரிய குழு ஒப்புதல்.. கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பம்

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பாரம்பரிய குழு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பாரம்பரிய குழு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர நலத் துறை அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரியக் குழு இந்த திட்டத்தை ஆராய்ந்து விவாதித்த பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்புக்கு பிறகு நாடாளுமன்ற கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அடுத்த 10 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். டெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments