150 ரூபாய் பாக்கிக்காக மண்டையை பிளந்த கோபக்கார டீக்கடைகாரர்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 150 ரூபாய் டீ பாக்கியை கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்தவரை டீக்கடைக்காரர் உருட்டுக்கடையால் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடனை கொடுக்க மறுத்து ரத்தத்துடன் எதிர்தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த தென்னம்பட்டியில் டீக்கடை நடத்தி வருபவர் முரளி.
இந்த கடையின் வாடிக்கையாளரான அம்மாசி என்பவர் தினமும் கடனுக்கு டீ குடித்த வகையில் 150 ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டி இருந்தது.
சம்பவத்தன்று கடன் பாக்கியை கேட்ட போது லந்தாக பேசிய அம்மாசிக்கும் முரளிக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த டீக்கடைக்காரர், உருட்டு கட்டையை எடுத்து அம்மாசியின் தலையில் தாக்கியதாகவும் அதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.
இதையடுத்து அடிவாங்கிய அம்மாசி தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து கடையில் ரகளை செய்ய கடையை அடைத்துக் கொண்டு முரளி கடைக்குள் ஒளிந்து கொண்டார்
அம்மாசி குழுவினர் , முரளியையும் , அவரது மனைவியையும் தாக்கினர், அம்மாசி போதையில் இருந்ததால் அவரால் உருக்கட்டையால் சரியாக தாக்குதல் நடத்த இயலாமல் அவதிப்பட்டார்
ஒரு கட்டத்தில் அவரை இழுத்து இருவரும் சாலையில் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்
இதனை வேடிக்கை பார்க்க கூடியவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு புகாரின் பேரில் டீக்கடைகாரர் முரளி அவரது மனைவி சண்முகம், காயம் அடைந்த அம்மாசி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் அன்பை முறிக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறோம், இங்கே கடன் மண்டையை பிளந்திருப்பது தான் சோகத்திலும் சோகம்..!
Comments