தியேட்டர் பன்னீருக்கு பணிந்த ஈஸ்வரன்..!

0 9820
தியேட்டர் பன்னீருக்கு பணிந்த ஈஸ்வரன்..!

ஈஸ்வரன் படத்தை வெளிநாடுகளில் மட்டும் ஓ.டி.டியில் வெளியிடப் போவதாக பட நிறுவனம் அறிவித்த நிலையில், திரையரங்கில் படத்தை வெளியிடப் போவதில்லை என்று ரோகிணி பன்னீர் செல்வம் எச்சரித்ததால்,ஓ.டி.டியில் வெளியிடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டுள்ளது.

ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள் என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் வைத்த நிலையில், மாஸ்டரை காரணம் காட்டி ஈஸ்வரனுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் 50 சதவீத இருக்கைகளுடன் ஈஸ்வரன் திரையரங்க வெளியீட்டால் போட்ட முதலீடு திரும்ப வருமா ? என்ற சந்தேகம் எழுந்ததால், பட தயாரிப்பு நிறுவனம், வெளிநாடுகளில் மட்டும் படம் திரையிடும் உரிமையை olyflix என்கிற ஓடிடி தளத்துக்கு விற்பதற்கு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இந்தியா தவிர்த்து ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், ஈஸ்வரன் படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்போவதில்லை என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தினார்.

பன்னீர் செல்வத்தின் எச்சரிக்கைக்கு பணிந்த படத் தயாரிப்பாளரோ, தான் வெளிநாடுகளில் ஓடிடியில் ஈஸ்வரன் படத்தை வெளியிடும் முடிவை ஒத்தி வைத்ததோடு, தனக்கு கூடுதல் திரையரங்குகளை ஒதுக்கித்தரவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 பாம்பு முதல் ஓடிடி வரை ஈஸ்வரன் படத்துக்கு பிரச்சனை வெளியில் இருந்து வர வேண்டாம், அவர்களாகவே அவ்வப்போது உருவாக்கிக் கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டும் திரை உலகினர் நல்லவேளை படத்திற்கு சனீஸ்வரன்னு பெயர் வைக்கவில்லை..! என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments