பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா வாபஸ் பெற்றதாக தகவல்

0 2502

கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சீன ராணுவ வீரர்கள் 10 ஆயிரம் பேரை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

லடாக் எல்லையை ஒட்டி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த பத்தாயிரம் பேரும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், முன்களப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருததரப்பு வீரர்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்தியா - சீனா ராணுவம் இடையே படை வீரர்களை விலக்கி கொள்வதற்கு பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments