சிங்கங்களைத் அலறியடித்து ஓடவிட்ட நாய் - நாயின் துணிச்சலைப் பாராட்டி வைரலாகும் வீடியோ

வனத்தில் நாய் ஒன்று சிங்கங்களுடன் சண்டையிட்டு விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காட்டு விலங்குகளில் ராஜா என்று கெத்தாக அழைக்கப்படுவது சிங்கம். வீரம் என்றாலே சிங்கத்துடன் ஒப்பிட்டு அழைக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. நிலைமை, இப்படி இருக்கையில் வனத்தில் இரண்டு சிங்கங்களுடன் சண்டையிட்டும் குரைத்தும் நாய் ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
’Parveen Kaswan, IFS’ எனும் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், பார்வையாளர்கள் சிலர் ஜீப்பில் நின்று வீடியோ எடுக்க, அவர்களைப் பின்தொடர வரும் இரண்டு சிங்கங்களை அங்கிருக்கும் நாய் ஒன்று துணிச்சலுடன் எதிர்த்து சண்டையிடுகிறது. நாயின் குரைக்கும் சத்தம் மற்றும் துணிச்சலான சண்டையைப் பார்த்து மிரண்டு போன சிங்கங்கள் இரண்டும் அங்கிருந்து பின்வாங்கி தப்பித்து செல்கின்றன.
இந்த விடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள Parveen Kaswan, IFS, ”வாழ்க்கையிலும் இந்த நாயைப் போல நமக்குத் துணிச்சலும் நம்பிக்கையும் தேவை” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பகிரும் பலரும், நாயின் துணிச்சலைப் பாராட்டி வருகிறார்கள்.
Need this much confidence in life. Dog vs Lion. It also highlights issue of stray dogs & wildlife interaction. @zubinashara pic.twitter.com/lNu7X4ALm5
Comments