மின்சாரம் தாக்கி இறந்த பசு : தாய் இறந்தது தெரியாமல் நாவால் வருடி எழுப்பும் கன்றுக்குட்டி, காண்போரை கலங்கவைக்கும் தாய் பாசம்

சென்னை அருகே மின்சாரம் தாக்கி தாய் பசு உயிரிழந்தது தெரியாமல் கன்றுகுட்டி அதனை நாவால் வருடி எழுப்ப முயன்ற காட்சி காண்போரை கலங்கவைத்தது. பொழிச்சலூர் கற்பக விநாயகர் தெருவில் 15க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வரும் ராஜா, காலை வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பசு ஒன்றின் மீது கவுல்பஜார் அருகே உயர்மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், அது உயிரிழந்தது. ஆனால் தாயுடன் சென்ற கன்று உயிர் தப்பிய நிலையில், தாய் இறந்தது தெரியாமல் அதனை நாவால் வருடி எழுப்ப முயன்றது. உலகம் அறியாத இளம் கன்றின் தாய் பாசம் காண்போரை உருக வைத்தது.
Comments