தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 6 பேர் மட்டுமே பலி : 33 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை

0 3069

கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 682 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 869 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் 6 பேர் மட்டுமே பலி ஆனதால், கொரோனா உயிரிழப்பு 4 - வது நாளாக இரட்டை இலக்கத்திற்கு கீழே சரிந்துள்ளது.

33 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. சென்னையில் 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் தொடர்ந்து நீடித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments