கோவிஷில்டு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய சீரம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது மத்திய அரசு

சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷில்டு கொரோனா தடுப்பு மருந்தை, ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷில்டு கொரோனா தடுப்பு மருந்தை, ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
அவசர கால பயன்பாட்டுக்கு அந்த மருந்தை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு 200 ரூபாய் என்ற விலைக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பு மருந்தை கொண்டு செல்லும் பணி தொடங்க இருக்கிறது.
Comments