தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் - சி.டி. ரவி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சியே தீர்மானிக்கும் என்றார்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அக்கட்சி அறிவித்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என அந்த கட்சியின் மாநில தலைவர் எல். முருகனும், சி.டி.ரவியும் கூறியிருந்தனர். இந்த நிலையில் இப்போது அவர் தமது நிலைபாட்டை மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments