சபரிமலையில் வருமான இழப்பை ஈடுசெய்ய மாத பூஜை நாட்களை அதிகரிக்க முடிவு

வருமான இழப்பை ஈடுசெய்ய சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
வருமான இழப்பை ஈடுசெய்ய சபரிமலை கோவிலில் மாத பூஜை நாட்களை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்றார். கடந்த ஆண்டை விட வருமானம் மிகவும் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.
தினசரி செலவுகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு வருமானம் சரிந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொருளாதார நிலையை மேம்படுத்த மாத பூஜை நாட்களை 5 நாட்களுக்கு பதிலாக 10 நாட்களாக அதிகரிக்க ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் வாசு தெரிவித்தார்.
Comments