கொரோனா தொற்று காரணமாக நாட்டில் முதல் முறையாக பட்ஜெட் பிரதி அச்சடிக்கும் பணி நிறுத்தம்

நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் பிரதிகளை அச்சடிக்கும் பணி நடைபெறாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் பிரதிகளை அச்சடிக்கும் பணி நடைபெறாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டு தோறும் நிதித்துறை அமைச்சகத்தின் அச்சகத்தில், ஊழியர்கள் இரவு பகலாக தங்கி பட்ஜெட் பிரதிகளை அச்சடிப்பார்கள்.
ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக, பட்ஜெட் பிரதிகளை அச்சடிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என்றும், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் முதல் முறையாக பட்ஜெட் அச்சடிப்பு பணி மட்டுமின்றி, இதற்காக அல்வா கிண்டும் பணியும் நடைபெறாது என்று நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கலாகும் பட்ஜெட் காகித சிக்கனத்துடன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெடாக இருக்குமென்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments