நாடு முழுவதும் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிப்பு

நாட்டில் பறவை காய்ச்சல் பரவியுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, குஜராத், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ஏற்கெனவே பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இறந்து கிடந்த காக்கைகள், வாத்துகளின் உடல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பறவைக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவில் பார்பானி உள்ளிட்ட இடங்களில் பறவை காய்ச்சலால் கோழிகள், பறவைகள் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10வது மாநிலமாக உத்தரகண்ட் மாநிலத்திலும் பறவை காய்ச்சல் உறுதியாகியிருப்பதாகவும், டேராடூன், கோட்வார் மாவட்டங்களில் (Kotdwar & Dehradun districts) காக்கைகள் பறவை காய்ச்சல் பலியாகியிருப்பதாக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Comments