வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற கருத்தை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்களை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத்தின் கருத்து அரசியலமைப்பின் நடைமுறைகளின் படி மத்திய அரசு தனது கடமைகளை சரிவர ஆற்றவில்லை என்பதை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைக் கருத்திற்கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments