திரையரங்கில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 1357
திரையரங்கில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திரையரங்கில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணைக்கு எதிரான மனுக்கள், நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில்," மறு உத்தரவு வரும்வரை 50% இருக்கை வசதிகளுடனேயே திரையரங்குகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த செயல்பாட்டுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments