அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றி அமைக்க கோரிய வழக்கை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியிருப்பதால் அவர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது என தெரிவித்தனர்.
காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல் மரியாதை வழங்குவது மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை வைப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
Comments