மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழுடன் பங்கேற்ற விவகாரம் : மாணவியின் தந்தையை பரமக்குடிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை

0 2054

ருத்துவ கலந்தாய்வில் நீட் போலி மதிப்பெண் சான்றிதழுடன் பங்கேற்ற விவகாரத்தில் கைதான மாணவியின் தந்தையை அவரது சொந்த ஊரான பரமக்குடிக்கு அழைத்துச் சென்று பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.

மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழோடு கலந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில்  மாணவி தீக்சிதா,  தந்தை பாலச்சந்திரன் மீது   6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் பதுங்கியிருந்த  பாலச்சந்திரனை பெரியமேடு போலீசார்  கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாகவுள்ள மாணவியையும்,   போலி சான்றிதழ் தயாரிக்க உடந்தையாக இருந்த இடைத் தரகரையும் தேடி வருகின்றனர்.  பரமக்குடி பிரவுசிங் சென்டரில்  சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதால், அதுகுறித்து விசாரிக்க அங்கு  பாலசந்திரனை போலீசார் அழைத்து  சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments