தீப்பிடித்து எரிந்த கார்.. காருக்குள்ளே எரிந்து கருகிய ஓட்டுநர்

0 16422
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுநர் கருகி இறந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுநர் கருகி இறந்தார்.

வேப்பூரிலிருந்து கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தக் கார், விருத்தாசலம் மணவாளநகர் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கிய நிலையில், திடீரென காரிலிருந்து புகை வந்துள்ளது. சில நொடிகளில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

உடனடியாக காரை ஓரம்கட்டிய ஓட்டுநர் அதிலிருந்து இறங்க முயன்றுள்ளார். ஆனால் சீட் பெல்டையும் அகற்ற முடியாமல், காரின் கதவுகளையும் திறக்கமுடியாமல் போகவே, காருடன் அவர் எரிந்து கருகி பலியானார்.

கார் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் காரின் கதவுகளை திறக்க முயன்றும் அது தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.,

காரில் வந்தவர் யார் ? கார் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments